தமிழ்நாடு – கரூரில் (27) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் த.வெ.க தலைவர் விஜய் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதன்படி கரூர் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னை நீலாங்கரை இல்லத்தில் த.வெ.க. தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, அடுத்த வாரம் நடைபெற இருந்த தனது பிரசார பயணத்தை விஜய், இரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை நீலாங்கரையில் விஜய் தற்போது தங்கி உள்ள அவரது வீடு உள்ள வீதியின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து பொலிஸார் பாதுகாப்பளித்து வருகின்றனர்.
இதனிடையே குறித்த சம்பவம் தொடர்பில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு த.வெ.க தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன