கேகாலை வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (28.03.2025) பிற்பகல் கேகாலை பொது வைத்தியசாலையின் முன்னால் தனிப்பட்ட முரண்பாடு காரணமாக விசேட வைத்திய நிபுணரை குறித்த நபர் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி பகுதியில் வசிக்கும் 29 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த வைத்தியர் தற்போது கேகாலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

March 30, 2025
0 Comment
137 Views