நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் சம்பவங்களில் நேரடியாக தொடர்புடைய மேலும் 20 பேரை பொலிஸார் கைது செய்துள்ளது.
இந்த விசேட நடவடிக்கையின் கீழ் 29.08.2025 வெள்ளிக்கிழமை 29,030 பேர் சோதனை செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக 815 சந்தேகநபர்களும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 315 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை தொடர்பாக மேலும் 142 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.