இஸ்மதுல் றஹுமான்
11 கோடி 50 இலட்சம் ரூபா பெறுமதியான 408 பவுன் நிரையுடைய 28 தங்க பிஸ்கட்டுகளை மோட்டார் வாகன உதிரிப்பாகங்களில் மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முற்பட்ட விமானப் பயணியை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.
11 ம் திகதி இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய விமானப் பயணியான சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான வர்த்தகர் "ரெட் செனல்" ஊடாக வந்து தான் கொண்டு வந்த மோட்டார் வாகன உதிரிப்பாகங்களுக்கு உரிய தீர்வை வரியை செலுத்திவிட்டு வெளியேறியுள்ளார்.
அவர் தொடர்பாக கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய அவரை கைது செய்த குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் அவர் கொண்டுவந்த மோட்டார் வாகன உதிரிப்பாகங்களை கலட்டி உன்னிப்பாக பரிசீலனை செய்த வேளையில் அங்கு மறைத்து வைத்திருந்த 03 கிலோ கிராம் 266 கிராம் நிரையுடைய 28 தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகநபரையும் கைபற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகளையும் மேலதிக விசாரணைக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.