ஜனாதிபதி செயலகத்தினால் நேற்று டெண்டர் முறையில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடாமல் டெண்டர் முறையில் விற்பனை செய்யப்பட்டதால் அரச நிதி பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தயாசிரி ஜயசேகர குறிப்பிட்டார்.
வாகனங்களை பகிரங்கமாக ஏலம் விடாமல் டெண்டர் முறையில் விற்பனை செய்தது ஏன் ? என அவர் கேள்வி எழுப்பிய அதேவேளை அரசுக்கு ஆதரவானவர்களுக்கு வழங்கவே பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யாமல் விலை மனுகோரல் டெண்டர் முறையில் விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தினார்.
விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் சந்தை பொறுமதி 65 கோடி என கூறிய அவர் இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறையிட உள்ளதாக கூறினார்.