வவுனியா கூமாங்குளத்தில் தமிழ் இளைஞன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் சொல்கின்றன.
வீட்டுக்கு பொருட்கள் வாங்கிச்சென்ற தமிழ் இளைஞனே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.
சம்பவ இடத்தில் பண்டார என்ற பொலிஸ் பெயர் தகடு மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.