எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் கிழக்கு மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பதுளை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களின் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு நாளை மாலை 04:00 மணி வரை மண்சரிவு அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது