பௌர்ணமி தோறும் கவியரங்கு நடாத்தி கவிஞர்களுக்கு மேடை அமைத்து கொடுக்கும் தமிழ்க் கவிஞர்களின் தேசிய அமைப்பான வலம்புரி கவிதா வட்டம் (வகவம்) தனது 93 ஆவது கவியரங்கை கடந்த பௌர்ணமி தினமான ஒக்டோபர் 28 ஆம் திகதி நடாத்தியது.
கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற கவியரங்கிற்கு வெலிகம மதுராப்புர கவிஞர் கலைமகன் பைரூஸ் தலைமை தாங்கினார்
நிகழ்வுகள் வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைனின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றன. செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரையும், பொருளாளர் ஈழ கணேஷ் நன்றியுரையும் வழங்கினர்.
நம்மை விட்டும் மறைந்த எமது கவிஞர் தாட்சாயினி சர்மா அவர்களின் கணவர் திரு. சர்மா, பிரபல அறிவிப்பாளர் கலைநிலா உவைஸ் ஷெரீப் ஆகியோருக்கான மௌனப் பிரார்தனையும் நடைபெற்றது.
நூறாவது கவியரங்கினை நோக்கி நகரும் வகவம், அதனை ஒரு விழாவாக கொண்டாட இருப்பதாகவும் அன்றைய தினம் வெளியிடத் தயாராகும் வகவ கவிஞர்களின் கவிதைத் தொகுப்புக்காக கவிதைகளை அனுப்பி வைக்குமாறு வகவ கவிஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கலைமகன் பைரூஸ் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் கவிஞர்கள் கிண்ணியா சபீனா வைத்துள்ளாஹ், வெலிப்பன்னை அத்தாஸ், வாசுகி பி. வாசு, மஸீதா அன்சார், சிங்கள மாணவி சந்திரசேகர தனூஷிகா, கிண்ணியா அமீர் அலி, தமிழ்த் தென்றல் அலி அக்பர், ராஜா நித்திலன், தாட்சாயினி சர்மா, இ. கலைநிலா, சிந்தனைப்பிரியன் முஸம்மில்,
மினுவன்கொடை ஏ. சிவகுமார்,
கவிஞர் திலகம் எம். பிரேம்ராஜ், தி. ஸ்ரீதரன், ஆர். தங்கமணி, பர்ஹாத் சித்தீக், வதிரி சி. ரவீந்திரன், எம். எச். எம். நவ்சர் ஆகியோர் கவிதை பாடினர்.
நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், சு. ஜெகதீஸ்வரன், ஏ. எம். அஸ்கர், ஏ. கே. இளங்கோ, மலாய்கவி டிவாங்ஸோ, ஜொயெல் ஜோன்சன், ரி. என். இஸ்ரா, எம். எம். நவாஸ்தீன், மா. தியாகராஜா, ஐனுல் முப்லியா, எம். எஸ். கே. நஜிமுதீன், கவிதா இளங்கோ, முப்ளியா முஸம்மில், உணர்ச்சிப் பூக்கள் ஆதில், எம். எம். நவாஸ்தீன் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2023/10/9d3b7d63-5fe2-47e3-8982-c386f5d75614.jpg)
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2023/10/075a0bd3-87a0-445a-aac5-033b74529b90-1024x682.jpg)
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2023/10/34783a43-b568-4fa5-a328-1b3c5134364f-1024x682.jpg)
![](http://tamil.colombotimes.net/wp-content/uploads/2023/10/a90bcc53-382b-4f1c-9f27-9adbb324f910-1-1024x682.jpg)