2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட வரி செலுத்த வேண்டிய அறிக்கையை வரி செலுத்துவோர் ஓகஸ்ட் 15அன்று அல்லது அதற்கு முன்னர் மின்னணுமுறையில் சமர்ப்பிக்குமாறு இறைவரித்திணைக்களம் நினைவூட்டலொன்றை வழங்கியுள்ளது.
இதன்படி 2024/2025 ஆம் ஆண்டுக்கான Y/A வருமான அறிக்கையை தாக்கல் செய்வதற்கு இலத்திரனியல் சேவைகளை தற்போது அணுகமுடியும் என்றும், அவை நவம்பர் 30, 2025 அன்று அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
IIT எளிமைப்படுத்தப்பட்ட வருமானம் உட்பட நிறுவன வருமான வரி, கூட்டாண்மை வருமான வரி மற்றும் தனிநபர் வருமான வரி ஆகியவற்றிற்கு காலக்கெடு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமதமாக பணம் செலுத்தினால் வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும் பணம் செலுத்தும் போது சரியான வரி வகை மற்றும் கட்டண காலக் குறியீடுகளைப் பயன்படுத்துமாறும் திணைக்களம் தெரவித்துள்ளது.
இதேவேளை புதுப்பிக்கப்பட்ட தகவலுக்கு இறைவரித்திணைக்களத்தின் வலைதளத்தைப் பார்வையிடுமாறு வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

August 8, 2025
0 Comment
127 Views









