(அஷ்ரப் ஏ சமத்)
இலங்கைக்கு சுற்றுலா பிரயாணிகள் வரலாற்றில் இறுதியாக 2018 ஆம் ஆண்டின் அதிகரித்திருந்தது
அந்த ஆண்டுக்கு பிறகு 2025 டிசம்பர் 29 ஆம் திகதி சுற்றுலாப் பிரயாணிகள் வருகை 2,337,796 (இருபத்தி மூன்று இலட்சத்து, முப்பத்து ஏழு ஆயிரத்து எழுநூற்று தொன்றுற்றி ஆறு ) ஆக அடைந்து சாதனை படைத்துள்ளது. . இது ஓர் வரலாற்று சாதனையாகும் 2.337,796 வது சுற்றுலாப் பிரயாணிகள் இந்தியாவில் இருந்து திருவாந்திரபுரம் ஊடக இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10.30 இலங்கைக்கு சுற்றுலா பிரயாணிகள் வருகை தந்த பேராசிரியர் பீலிக்ஸ் பெஸ்லின் அவரது மனைவி ஆசிரியை ரீனா பெர்னான்ட்ஸ் அவரது மகள் ஆங்கில கல்வியின் கலாநிதி ஆன் கிறிஸ்டினா ஆகியோர்கள் ஆவார்கள்.
அவர்களை வரவேற்று முகமாக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க, சுற்றுலாத்துறை மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் புத்திக்க ஹேவசாம், விமான சேவைகள் மற்றும் விமான நிலைய அதிகார சபையின் தலைவர், மற்றும் சுற்றுலாத்துறை வர்த்தக சங்கத்தின் தலைவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் உரையாற்றிய சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க அவர்களினால் இவ் சுற்றுலாப் பிரயாணிகளுக்கு மலர் மாலையிட்டு பரிசுப்பொருள் வழங்கி, நினைவுக் கேக் வெட்டி ஊடக சந்திப்பு ஒன்றும் விமான நிலையத்தில் நடைபெற்றது.
இலங்கையில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப் பேரணி இடம் பெற்றும் இந்த நாட்டில் எவ்வித சுற்றுலாப்பிரயாணிகளோ சுற்றுலா ஹோட்டல்கள் பாதிக்கப்படவில்லை. இலங்கையில் இம்முறை சுற்றுலாப் பிரயாணிகள் வருகை சாதனை படைத்துள்ளது. இலங்கையின் மொத்த உற்பத்தி வருமானம் அந்நியச் செலவானியின் பெரும் பங்கு வகிப்பது சுற்றுலாத்துறையும். ஒரு நாளைக்கு 12 ஆயிரம் சுற்றுலாப் பிரயாணிகள் இலங்கை வந்தடைகின்றன. இந்த மாதத்தில் பெரும்பாலான இந்தியர் , சீனர்கள், பெருமளவில் வருகை தருகின்றனர்.
அடுத்த வருடம் இதனை விட 24 மில்லியன் சுற்றுலாப் பிரயாணிகள் என்ற நோக்கில் நாங்கள் சுற்றுலாப் பிரயாணித்து முன்னேற்ற உள்ளோம். இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி நிதிகளின் ஊடக இத்துறையை வட கிழக்கு உட்பட அபிவிருத்தி செய்யவுள்ளோம்
இலங்கையில் விமான நிலையம், விமான போக்குவரத்து அதிகார சபையின் மீள் நவீன முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலாத்துறை ஈ விசா ஊடகா இலகுவாக வருகை தரக் கூடிய சந்தர்ப்பங்கள் செயல்படுகின்றன அத்துடன் சுற்றுலாத்துறை மற்றும் விமான நிலையமும் இணைந்து செயல்படுகின்றன. என பிரதியமைச்சர் அங்கு தெரிவித்தார்










