கொழும்பு – வனவாசல மற்றும் களனி நிலையங்களுக்கு இடையிலான ரயில் கடவையில் ரயில் கார் மீது மோதியது
நவம்பர் 5, 2025 மாலை 08:09 மணியலவில் வனவாசல மற்றும் களனி நிலையங்களுக்கு இடையிலான ரயில் கடவையில் ஒரு ரயில் கார் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் காரின் ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொல்கஹவெல நோக்கிச் செல்லும் ரயில் விபத்து காரணமாக, பிரதான பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.










