வட அமெரிக்காவின் யுகோன் பகுதியில் 7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடஅமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணமான அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வுநிலையத்தின் தகவல்படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி அலாஸ்காவின் ஜூனோவிற்கு வடமேற்கே சுமார் 370 கிலோமீற்றர் தொலைவிலும், யுகோனில் உள்ள வைட்ஹார்ஸுக்கு மேற்கே சுமார் 250 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது.










