இஸ்மதுல் றஹுமான்
கட்டுநாயக்க பொலிஸ் பகுதியில் ஆண்டியம்பலம, தெவமொட்டாவ பிரதேசத்தைச் சேர்ந்த அங்சன என்பரின் வீட்டிற்கு வந்த இனம் தெரியாத இருவர் அவரை துப்பாக்கியால் வெடி வைக்க முனைந்த போது அவருடன் ஏற்பட்ட மோதலில் வந்த இருவரும் மதில் மேல் ஏறி தப்பி ஓடும் போது ஒருவர் பிடிபட்டுள்ளதுடன் மற்றையவர் தப்பிச் சென்றுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது வட்டிக்கு பணம் கொடுக்கும் அங்சன என்பவரின் வீட்டிற்கு பணம் பெறுவதற்காகஇனம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
அவர்களின் ஆவணங்களை பரிசோதிக்கும் போது ஒருவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வெடிவைக்க எத்தனிக்கும் போது அது சுடுபடவில்லை. குறித்த நபர் அவர்கள் மேல் பாய்ந்து தடுத்தபோது அவ் இருவரும் ஓடியுள்ளனர். வீட்டு உரிமையாளர் ரிமோட் கொன்றோல் மூலம் கேட்டை மூடியதினால் இருவரும் உயர்ந்த மதிலால் ஏறி தப்பி ஓடும் போது ஒருவர் கீழே விழுந்துள்ளார். பிரதேசவாசிகள் அவரைபிடித்து அடித்துள்ளனர். காயமடைந்த அந் நபர் பொலிஸ் பாதுகாப்பில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தப்பி ஓடியவர் நீர்கொழும்பு, ஜயரத்ன வீதி றபர்வத்தையைச் சேர்ந்த 29 வயது நபர் என அடையாளம் கண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து கறுப்பு நிற பேர் கைதுப்பாக்கி ஒன்று 9 மிமீ மெகசின் இரண்டும் கை பற்றப்பட்டுள்ளன.
அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டது ஒன்று என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்
பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.