வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது புதிய கல்வி மறுசீரமைப்பின் முக்கிய இலக்காகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நிகழ்வில் உரையாற்றிய அவர், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்கள் இருந்தால் தரமான கல்வி வழங்க முடியாது எனக் கூறியுள்ளார்.
பாடத்திட்டம், ஆசிரியர்களின் தொழில்திறன், கல்வி நிர்வாக அமைப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளில் மாற்றங்களை கொண்டுவரும் திட்டமே இந்த கல்வி மறுசீரமைப்பாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
“இது எமது அரசியல் இலாபத்திற்காக அல்ல; நாட்டின் எதிர்காலத்துக்காக நடவடிக்கையாகும்” என்றும், ஆகஸ்ட் மாதம் முதல் ஆசிரியர் பயிற்சிக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உயர்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவாகே, தொழில்சார் கல்வி பாடசாலை மட்டத்திலேயே கௌரவத்துடன் வழங்கப்படும் வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் தென் மாகாண ஆளுநர், உயரதிகாரிகள் மற்றும் கல்வித் துறையினருடன் பலர் கலந்து கொண்டனர்.

July 19, 2025
0 Comment
14 Views