லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி 21.07.2024 கொழும்பு கெத்தாராம சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் கோல் மார்வெல்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த ஆட்டம் 21.07.2024 இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, விளையாட்டு மைதானத்தின் வாயில்கள் பார்வையாளர்களுக்காக மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும் என ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.
மாளிகாவத்தை, விகாரை மாவத்தை மூடப்படவுள்ளதுடன், மைதானத்திற்கு வரும் வாகனங்கள் டொக்டர் பாபாபுள்ளே மாவத்தையை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் தங்கள் வாகனங்களை ஏப்பல் வத்தை மற்றும் ஸ்ரீ சுதர்மாராம மாவத்தையிலும் நிறுத்தலாம்.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்ததுவுடன் சுமார் 500 ட்ரோன்களை கொண்டு சாகச நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.