பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடியை பிணையில் விடுவிக்க மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (01) ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய வாகன கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வீரக்கொடி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது