இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் Levan S. Dzhagaryan, 25.02.2026 முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச் சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் சுற்றுலாத்துறை, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் ஜேர்மன் ஃபெடோரோவ் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.










