ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவில் ஈடுபடுவதை இடை நிறுத்துவதற்கான இணக்கத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வௌியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வௌ்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை அமெரிக்கா செலுத்த முயற்சிப்பதால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா தமது கொள்முதல்களை “குறுகிய காலத்திற்குள்” நிறுத்தும் என்று மோடியிடமிருந்து உறுதிமொழிகளைப் பெற்றதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் கொள்வனவில் ஈடுபடுகின்றமை ரஷ்யாவுக்கு உக்ரைன் உடனான போரை தொடருவதற்கு வழி வகுத்துள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வந்தார்.
அதனால் அதனை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அழுத்தம் வழங்கினார்
இதனால் அமெரிக்க ஜனாதிபதி தமது வர்த்தகப் போரில் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்டார்.
எனினும் இந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியினை அமெரிக்க ஜனாதிபதி அறிவித்தார்.
இதனால் நீண்ட நாட்களாக அமெரிக்கா – இந்தியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டது.

October 16, 2025
0 Comment
5 Views