கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11ஆம் திகதி ஏற்பட்ட பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து இழப்பீடு வழங்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளார்.
அதன்படி, இழப்பீட்டுத் தொகை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 மில்லியன் ரூபா உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.