யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தயாரும் நேற்று (26) உயிரிழந்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி குழந்தைகளின் தாய்க்கு திடீரென வலிப்பு ஏற்பட்டமையால், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதோடு, அறுவை சிகிச்சை வாயிலாக ஆண் குழந்தையொன்றையும் பெண் குழந்தையொன்றையும் பிரசவித்தார்.
இதன்போது ஆண் குழந்தை உயிரிழந்த நிலையிலேயே பிறந்ததோடு, பெண் குழந்தையும் பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்தது.
இந்நிலையில் தாய் தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணை திடீர் மரண விசாரணை அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது.
சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் ஒழுங்கப்படுத்தினர். ஆனால், மரணத்துக்கான காரணம் உறுதியாகாததால் உடற்கூறு மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
ஆனைக்கோட்டை, சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த சாருமதி எனும் 28 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.










