யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று (19) நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்தபோது துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்தபோது சந்தேகத்துக்கிடமான முறையில் உரைப்பை ஒன்று காணப்பட்டதையடுத்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் குறித்த உரைப்பையை சோதனையிட்ட போது அதற்குள் வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளன.
இதன்போது 1393 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டது. அவற்றை நீதிமன்றத்தில் பாரப்படுத்தி நீதிமன்ற உத்தரவையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










