மேற்கிந்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் அஸ்திரேலியா- மேற்கிந்திய தீவு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமானது.
இந்த போட்டியின் நடுவர்கள் வழங்கிய சில முடிவுகள் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அமைந்தன.
இது கிரிக்கெட் உலகில் பேசு பொருளானது. இது குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை பயிற்சியாளரான டேரன் சமி வெளிப்படையாக விமர்சித்திருந்தார். இது ஐ.சி.சி. விதிமுறையை மீறிய செயலாகும்.
இதனால் டேரன் சமி மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. டேரன் சமியும் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.