ஒக்டோபர் மாதத்தின் கடந்த 3 வாரங்களில் மட்டுமே சுமார் 120,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி ஒக்டோபர் 23ஆம் திகதி நிலவரப்படி 119,670 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதி வரையில் 1,845,164 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.










