நீதித்துறை சேவை ஆணைக்குழு , மூன்று நீதிபதிகளை அவர்களின் தவறான நடத்தை குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
குறித்த நீதிபதிகள் பின்வரும் காரணங்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குட்டி யானையை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக மொரட்டுவை மாவட்ட நீதிபதி திலினா கமகே இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மஹியங்கனை மேலதிக மாவட்ட நீதிபதி ரங்கனி கமகே மற்றும் மட்டக்களப்பு முன்னாள் நீதிபதி முகமது ஹம்சா ஆகிய இருவரும் தவறான நடத்தை தொடர்பான புகார்கள் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த இடைநீக்கங்களுக்கு மேலதிகமாக, ஆணைக்குழு மூன்று பயிற்சி நீதிபதிகளையும் பணியிலிருந்து நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.