இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு
நீதிமன்றுக்கு கைவைக்காதே, முல்லைத்தீவு நீதிபதிக்கு செய்த அச்சுறுத்தலை வன்மையாக எதிர்கிறோம் எனும் தொனிப் பொருளில் நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம் ஏற்பாடு செய்த அமைதி ஆர்ப்பாட்டம் நேற்று திங்கட்கிழமை காலை நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இங்கு ஆர்பாட்டக்காரர்கள் நீதிமன்றத்திற்கு கைவைப்பது அரசு தனது குழியைதோண்டிக்கொள்வது, இன்று நீதிபதி நாளை பொது மக்கள், நீதிக்கு அச்சுறுத்தல் நீதி அமைதியில், நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாப்போம் போன்ற சுலோக அட்டைகளை ஏந்தி நின்றனர்.