இஸ்மதுல் றஹுமான்
ஜே. சிறி ரங்கா முன் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே தல்லுபடி செய்தார்.
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக அவரை இழிவுபடுத்தும் சுவரொட்டிகளை கொழும்பு பிரதேசத்தில் ஒட்டியது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. சிறி ரங்காவை கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கைதுசெய்யத் தேடுவதாக வெளிவந்த செய்தியை அடுத்து ரங்கா தனது சட்டதரணி ஊடாக முன் பிணை கோரி கடந்த 9ம் திகதி பிரதான நீதிவான் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று 23 ம் திகதி பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் ரங்கா சார்பாக சட்ணதரணி திசேயா வேரகொட ஆஜராகி முன் பிணை வழங்கக் கோரி தனது சமர்பனத்தை முன்வைத்தார்.
சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக மன்றில் ஆஜரான அரச சட்ட வழக்கறிஞர் சக்தி யாகொட ஆரச்சி பிணை வழங்குவதற்கு கடும் ஆட்சேபனையை தெரிவித்தார்.
இருபக்க வாதங்களின் பின்னர் நீதிபதி
முன் பிணை மனுவை தள்ளுபடி செய்தார்.