முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (05) குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் நிதி ஒதுக்கீடுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமையவே வாக்கு மூலம் வழங்குவதற்காகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2023 செப்டம்பர் 13 முதல் -2023 செப்டம்பர் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 4 வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

August 5, 2025
0 Comment
8 Views