“ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடிய நிலையில் “ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் விவாதிக்கப்பட்டது.
இந்த விவாதத்தைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 01 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி 150 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேறியது