முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டமூலம் தொடர்பில் இன்று (10) விவாதிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விவாதமானது நாளை காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.