மியான்மரில் இன்று (03) காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 22.01 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.58 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

July 3, 2025
0 Comment
23 Views