மியன்மாரில் அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 4.13 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.
60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 22.61 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.73 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து, மியான்மரில் ரிச்டர் 3.5 அளவில் மாலை 4.24 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மியன்மாரில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.










