28 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த மின்சார ஊழியர்கள் இன்று (21) மருத்துவ விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளனர்.
மின்சார சபை ஊழியர்களின் சலுகைகளைப் பாதுகாக்கும் கூட்டு ஒப்பந்தம் ஒன்றைக் கோரியதை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.
மின்சார சபை (திருத்த) மசோதாவின் இரண்டாவது வாசிப்பு நாளை மறுநாள் (24) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.