இஸ்மதுல் றஹுமான்
அமைப்பு ரீதியாக குற்றச் செயல்களில் ஈடுபடும் குழு ஒன்றின் உறுப்பினரான மிதிகம சஹன் என அழைக்கப்படும் ஹிக்கடுவ லியனகே சஹன் சிசிகெலும் இந்தியாவிலிருந்து இலங்கை வரும்போது 28ம் திகதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றவியல் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
32 வயதான இவர் வெலிகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்டவர். மாத்தறை, பினந்துறை பொலிஸ் பிரதேசங்களில் பாரியளவில் ஆட்கொலை, கொள்ளையடித்தல் போன்ற அமைப்பு ரீதியான குற்றச் செயலில் ஈடுபட்டவராவர்
மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ்ஹரக்கட்டிவின் உதவியாளர் என்பதுடன் மிதிகம சூடி எனும் அமைப்பு ரீதியான குற்றவாளியின் நெருக்கமானவராவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் இந்தியா, சென்னை நகரிலிருந்து இணொடிகோ விமான சேவையின் 6 ஈ -1173 இலக்க விமானத்தில் 28ம் திகதி இரவு 6.30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமானம் நிலையத்தை வந்தடைந்த போது கைது செய்யப்பட்டார்.
இவர் தொடர்பாக மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைக்காக சந்தேக நபரை கழுத்துறை பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.