லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தினால் (MTF) பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மார்ச் மாதத்திற்குரிய புலமைப்பரிசில் தவணைப்பணம் 10.04.2026 வங்கி கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மார்ச் மாதத்திற்கான 10,000 ரூபா மாதாந்த தவணைப்பணம் மாணவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியம் தனது கொடுப்பனவுச் செயல்முறையின் வினைத்திறனை அதிகரித்துள்ளதன் காரணமாக, மார்ச் மாதத்திற்குரிய தவணைப்பணத்தை உரிய திகதிக்கு முன்னரே மாணவர்களுக்கு வழங்க முடிந்துள்ளதாக அந்த நிதியத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசருமான விஜித் மலல்கொட தெரிவித்துள்ளார்.










