செட்டிகுளம், மாங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் நான்கு பேர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 25 கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட 40 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் 21,28,40,43 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் செட்டிகுளம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.