முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (19) தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு தனது மனைவியுடன் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று மதியம் நீண்ட நேரம் உரையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.










