முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க 14.02.2024 இதனைக் அறிவித்தார்.
முன்னாள் அமைச்சர் பொரளையில் 274 இலட்சம் ரூபா பெறுமதியான சொகுசு வீடு ஒன்றை கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு 14.02.2024 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சனில் குலரத்ன மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகே சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி காஞ்சன ரத்வத்த ஆகியோர் வாய்மூல வாதங்களை முன்வைத்துள்ளனர்.