பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
கடும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான் கதவுகளும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகளும் நேற்று (09) பிற்பகல் முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுராதபுரம் வலய நீர்ப்பாசனப் பணிப்பாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்தார்.
தலா 08 அடியில் 02 வான் கதவுகள், தலா 06 அடிகள் கொண்ட 02 வான் கதவுகள், தலா 04 அடிகள் கொண்ட 04 வான் கதவுகள், தலா 02 அடிகள் கொண்ட 04 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 15,100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் தலா ஒரு அடி திறக்கப்பட்டு வினாடிக்கு 650 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.