தொடர்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் நாளை (23) நண்பகல் 12.00 மணி வரை வழமைக்கு திரும்பாதென்றும் இன்றும் இரவு நேர தபால் ரயில் சேவைகள் இயங்காதென்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக மலையக ரயில் சேவைகள் பல இன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது, மலையக ரயில் சேவைகள் ரம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதெனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.










