களுவாஞ்சிக்குடி, கோட்டைக்கல்லாறு பகுதியிலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (19) குறித்த வீடொன்றில் ஒருவர் சடலமாக கிடப்பதாக களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்று விசாரித்ததில் உயிரிழந்தவர் கோட்டைக்கல்லாறு பகுதியைச் சேர்ந்த 57 வயதானவர் எனவும் இவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பெண்ணின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின், பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.










