மன்னார் பேசாலை கடலில் 15.01.2026 மாலை நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன நான்கு பேரில் 3 பேர் உயிரிழந்தனர்.
காணாமல் போனவர்களில் இருவரது சடலங்கள் 15.01.2026 மாலை மீட்கப்பட்டது.
அத்துடன் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் காணாமல் போன மற்றுமொருவரின் சடலம் நேற்றிரவு கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர் ஒருவரும் அடங்குவதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 16 முதல் 18 வயதுடைய பேசாலை, வசந்தபுரம், உதயபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










