கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்படுவதைத் தடுக்க முன்பிணை வழங்குமாறு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தாக்கல் செய்த கோரிக்கை மீதான உத்தரவு எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்பிணை கோரிக்கை பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடத்திய விசாரணை தொடர்பாக கைது செய்யப்படுவதை தவிர்க்க முன் பிணை கோரி மனுஷ நாணயக்கார இந்த மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.