தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மத்திய மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று இடங்களுக்கு, மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேறுவதற்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டஹின்ன மற்றும் வலப்பனை ஆகிய பகுதிகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் 06.01.2026 நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் 3 மாவட்டங்களுக்கு ‘அவதானமாக இருக்குமாறும்’, மற்றுமொரு 4 மாவட்டங்களுக்கு ‘விழிப்பாக இருக்குமாறும்’ மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
அப்பிரதேசங்கள் வருமாறு:
எச்சரிக்கை நிலை 3 – வெளியேறுங்கள் (சிவப்பு)
கண்டி மாவட்டம்:
உடுதும்பர
நுவரெலியா மாவட்டம்:
நில்தண்டஹின்ன, வலப்பனை
எச்சரிக்கை நிலை 2 – அவதானமாக இருங்கள்
பதுளை மாவட்டம்:
கந்தகெட்டிய
மாத்தளை மாவட்டம்:
வில்கமுவ
நுவரெலியா மாவட்டம்:
ஹங்குரன்கெத, மதுரட
எச்சரிக்கை நிலை 1 – விழிப்பாக இருங்கள்
பதுளை மாவட்டம்:
பதுளை, ஹாலிஎல, பசறை, லுணுகலை, வெலிமடை, மீகஹகிவுல
கண்டி மாவட்டம்:
தொலுவ
மாத்தளை மாவட்டம்:
அம்பன்கங்கை கோரளை
மொனராகலை மாவட்டம்:
பிபிலை










