நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 38 பேர் நேற்று (06) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 25,829 பேர் பரிசோதிக்கப்பட்டபோது இதில் 672 சந்தேக நபர்களும், குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புப்பட்ட 16 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 171 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 131 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 09 வழக்குகள் மற்றும் 3,439 பிற போக்குவரத்து குற்றங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.