NCEASL (National Christian Evangelical Alliance of Sri Lanka) நிறுவன அனுசரனையுடன் கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் (RDF) மன்னார் கிளைக்காரியாலயத்தினால் ஏற்பாடு செய்த மதம் அல்லது மத, நம்பிக்கை, மத சுதந்திரம் எனும் தலைப்பிலான செயலமர்வு இன்று (9/11/2025) மன்னார் கிராம அபிவிருத்தி நிறுவன பயிற்சி வளாகத்தில் இடம்பெற்றது.
கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் ஏ.ஆர்.ஏ.றமீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்த செயலமர்வில் மன்னார் கிளைக்காரியால உத்தியோத்தர்களின் ஒழுங்கமைப்புடன் வளவாளர்களான மாதங்கி உதயபாலன், அப்கர் ஹஸன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த செயளமர்வில் தலைமன்னார் பியர், மற்றும் வட்டக்கண்டல் கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செயப்பட்ட பல்லினம் சார் 35 இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.
இதன் போது எமது ஒவ்வொரு சமய அடையாளங்களையும், நம்பிக்கைகளையும், உரிமைகளையும் எவ்வாறு மதித்தல் என்றும் அவற்றை அவமதிப்பது பற்றியும் அவை மற்றவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு இலங்கையில் மத சுதந்திரம் மற்றும் மத, நம்பிக்கை தொடர்பான உரிமைகள் தொடர்பாகவும் இலங்கை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட விடயங்களையும் முன்வைத்து விளக்கமளிக்கப்பட்டது.












