உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்று மீண்டும் 70 அமெரிக்க டொலரை நெருங்கியுள்ளது.
இதன்படி, ஒரு மாதத்திற்கு பிறகு WTI இரக மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 65.33 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன் பிரெண்ட் இரக மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 68.87 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 2.9 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.