தற்காலத்தில் பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் எதிராக விடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் ‘மகா சங்க மாநாடு’ 20.02.2026 நடத்தப்படவுள்ளது.
இந்த மாநாடு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத் தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சங்க மாநாடு எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பிக்குகளுக்கு எதிராக விடுக்கப்படும் பல்வேறு அழுத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்த மாநாட்டின் பிரதான நோக்கம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், பிரிவினைவாதத்திற்கும் பிரிவினைவாத சக்திகளுக்கும் எதிராகச் செயற்படுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து, மக்கள் மனு ஒன்றில் கையெழுத்திடும் வேலைத்திட்டம் நேற்று (19) ஆரம்பமானது.
பெப்லியான சுனேத்ராதேவி மகா பிரிவெனா வளாகத்தில் இந்த மக்கள் மனுவில் கையெழுத்திடும் நடவடிக்கை ஆரம்பமானதாக ‘அட தெரண’ செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர்களான மேதகொட அபயதிஸ்ஸ தேரர், இந்துராகாரே தம்மரதன தேரர் மற்றும் மல்வானே சந்தரதன தேரர் ஆகியோரின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் குணதாச அமரசேகர மற்றும் கல்யாணந்த திராணகம உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட தேசிய அமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்த மக்கள் மனுவை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.










