போலி பிரித்தானியா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜப்பான் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு பயணிக்க முயன்ற ஈரான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஈரான் பிரஜை நேற்று (19) இரவு 8 மணியளவில் ஜப்பானில் உள்ள நரிட்டா விமான நிலையத்திற்கு புறப்படுவதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்தார், மேலும் அவர் வழங்கிய பிரித்தானிய கடவுச்சீட்டில் சந்தேகம் ஏற்படவே, பரிசோதனை செய்த போது குறித்த கடவுச்சீட்டு போலியானது என்பது போது தெரியவந்தது.
பின்னர், சந்தேக நபரின் பயணப்பொதியை சோதனை செய்தபோது, அவரது ஈரான் கடவுச்சீட்டு பயணப்பொதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஈரான் பிரஜையை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள விமான நிலையப் பிரிவு தெரிவித்துள்ளது.

July 20, 2025
0 Comment
65 Views