பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடா பயாகல பகுதியில் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (21) நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பயாகல பகுதியைச் சேர்ந்த 44 வயதானவராவார்.
சந்தேக நபரிடமிருந்து 1 கிலோ 175 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை பயாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.