குறைந்த விலைக்கு பொஸ்பேற்றுகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரது முன்னாள் அமைச்சர்கள் உறுப்பினர்கள் பலருக்கு எதிரான மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் நேற்று (01) அனுமதி அளித்துள்ளது.
எப்பாவல பொஸ்பேற்று சேமிப்பகத்திலிருந்து முந்தைய அரசாங்கத்துடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட பல நிறுவனங்களுக்கு, ஏற்றுமதிக்கான நிலையான விலையை விடக் குறைந்த விலையில் பொசுப்பேற்றுகளை வழங்கியதாக குற்றம் சாட்டி, குறித்த தரப்பினருக்கு எதிராக இந்த அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.